இவர்களா
ஏழைகள்::
நடைப்பயிற்ச்சி
செய்யும் பூங்காவில் கிரிகெட் ஸ்டேடியம் கட்டப்படுவதையும், அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளின்
இரு குழந்தைகள் விளையாடுவதை குறித்தும் முன்பு எழுதியிருந்தேன்.
இன்று
அந்த குழந்தைகள் அவர்களது குடிசைக்கு அருகே இருந்த உடைந்த மேஜை மீது ஒரு உடைந்த பூந்தொட்டியை
வைத்து அருகிலிருந்த மரங்கள் செடிகளிலிருந்த மலர்களை பறித்து அதை தொட்டியில் வைத்த
அழகு படுத்திக்கொண்டிருந்தனர். நான் இரண்டு ரவண்டு அடித்து முடித்த போது அழகாக அடுக்கி
விட்டு தூரத்தில் நின்று ரசித்து கொண்டிருந்தனர். அம்மாவை கூப்பிட்டு காட்டினார்கள்.
சமைத்து கொண்டிருந்த அவள் திரும்பி தொட்டியை பார்த்து விட்டு குழந்தைகளை பார்த்து புன்னகைத்தாள்.
மிகப்பெரிய
பூங்கா இவர்களது குடிசையை சுற்றி குளிர் தரும் மரங்கள். செடி கொடிகள். அனைத்தும் பூத்து
குலுங்குகின்றன. இயற்க்கை சூழ்ந்த வாழ்க்கை. இருவரும் கட்டிட வேலை முடித்து வந்திருந்தனர்.
பெண் குளித்து விட்டு சமையல் வேலையை கவனித்து கொண்டிருந்தாள். ஆண் குளித்து விட்டு
நிக்கர் போட்டுக்கொண்டு தலையை துவட்டி கொண்டிருந்தான். கிழவி ஒருத்தி கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள்.
அந்த நிலையிலும் அவள் தனது கலாச்சாரத்தை காப்பாற்றிக்கொண்டிருந்தாள். தலையில் முக்காடு
போட்டுக்கொண்டிருந்தாள்.. அது பின்புறம் நழுவும் போது அதை முன்பக்கம் நெற்றி வரை இழுத்து
விட்டுக்கொண்டாள்
சுடச்சுட
சப்பாத்தி செய்து கொடுப்பாள். குழந்தைகள் முதலில் சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன்.ஆண்
சாப்பிட்ட பிறகு பெண்கள் சாப்பிடுவார்கள்.
அந்த
இடத்திலேயே தூங்குவார்கள். குழந்தைகள் தூங்கிய பிறகு வெட்ட வெளியில் இயற்க்கை துணையில்
நிச்சியம் புணருவார்கள்.
இந்த
இயற்க்கை சூழ்ந்த நிலையில் நம்மால் வாழ முடிவதில்லை. சுவர்களால் சூழப்பட்ட சிறையில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செயற்க்கை முறையில் அறையை குளிர வைக்கிறோம்.
இவர்கள்
வாழும் இயறக்கை நிலையை நாம் காண வருடம் ஒருமுறை விடுமுறை எடுத்துக்கொண்டு ஆயிரக்கணக்காக
லட்சக்கணக்காக செலவு செய்து பயணம் செய்து சில நாட்கள் கண்டு ரசித்து விட்டு வருகிறோம்.
அப்படியும் இவர்களை போல வெட்ட வெளியில் குறைந்த ஆடைகளுடன் சுடச்சுட சமைத்து சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
வெட்ட வெளியில் புணரும் வாய்ப்பு சுத்தமாக கிடைப்பதில்லை.
இவர்கள்
நமது வீடுகளை பார்த்து நமக்கு அது போல வீடு இல்லையே என கவலைப்படுகிறார்கள். எனக்கு
இவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.
இந்த்
தொழிலாளிகளுக்கு காலையில் எழுந்து அவசர அவசரமாக சமைத்து டப்பாவில் அடைத்துகொண்டு சில
மணி நேரம் பயணம் செய்து தீப்பெட்டி போல உள்ள
கூண்டுகளில் செயற்க்கையான முறையில் வேலை செய்து
, அங்கு வம்பு வளர்த்து அரசியல் செய்து நிர்வாகத்தை சந்தோசப்படுத்தி மாத சம்பளம்
வாங்குவதற்குள் B.P. சர்க்கரை நோய் மன அழுத்தம் போன்ற நோய்கள் வருகிறது.
மனைவியும்
வேலைக்கு போனால் அவர்கள் பேசிக்கொள்ள கூட வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பல சமயங்களில்
அவர்களது வேலை படுக்கையறயிலும் நுழைகிறது. குழந்தைகளுடன் சந்தோசமாக பேசி விளையாட முடியவில்லை.
அவர்களை கண்கணிக்க முடியவில்லை.
இவர்களுக்கு
அந்த கவலை இல்லை. வேலை செய்யும் இடத்திலேயே இவர்கள் குடிசை இருப்பதால் பயணம் செய்ய
வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு முறையும் சுடச்சுட சமைத்து சாப்பிடுகின்றனர். மேஸ்திரி
வேலைக்கு தினசரி ரூ.500/- ம் பெண்ணுக்கு குறைந்தபட்சம் ரூ.350ம் கிடைக்கிறது. மாத சம்பளமாக
பார்த்தாம் 15000 மற்றும் 10000 கிடைக்கிறது. பல லட்சம் செலவழித்து பொறியியல் படித்தவர்களுக்கு
கூட இந்த சம்பளம் கிடைப்பதில்லை. அவர்கள் படித்த படிப்பு சில வருடங்களில் மறந்து விடுகிறது.
கிடைத்த வேலையில் தொடர்கின்றனர். பெண்கள் சிறிது காலம் வேலை செய்து விட்டு, கல்யாணம்
செய்து கொண்டு குழந்தைகள் பெற்று படிப்பையும் வேலையையும் மறந்து விட்டு குடும்ப தலைவியாக
மாறி விடுகின்றனர்.
இப்படிப்பட்ட
நிலையில் இந்த தொழிலாளியின் குழந்தைகள் படிக்கவில்லை என்று வருத்தப்பட தேவையில்லை.
வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை கல்வி இருந்தால் போதுமானது. ஏதாவது தொழில் செய்து பிழைத்து
கொள்கின்றனர்.
இவர்களை
போல தொழிலாளிகலும் எப்போது சமூகத்துக்கு தேவை. இவர்களும் படித்து அலுவலகங்களில் வேலை
செய்ய ஆரம்பித்தால் இப்போது இவர்கள் செய்யும் வேலையை யார் செய்வார்கள். . எனவே
இவர்கள் வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று யாரும் புலம்ப வேண்டியதில்லை. ஆட்சியாளர்களையும்
அரசியல்வாதிகளையும் குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
நடுத்தரவர்க்கம்
வேலை மாற்றம் ஏற்ப்பட்டு அல்லது வேறு வேலை தேடிக்கொண்டு வேறு இடத்திற்க்கு செல்லும்
போது மனைவியின் வேலை மாற்றம் குறித்து யோசிக்க வேண்டும். குழந்தைகளின் படிப்பு கெடுவது
குறித்து கவலை உண்டாகிறது. புதிய பள்ளியில் சேர்க்க படாதபாடு பட வேண்டியுள்ளது. இந்த
நிலையில் குடும்பத்தை அந்த ஊரிலேயே விட்டு விட்டு ஆண் மட்டும் வேறு இடத்திற்க்கு செல்கிறான்.
அதற்கு பிறகு அவர்கள் படும் கட்ட நட்டங்கள் சொல்ல முடியாது.
இவர்கள்
வேறு இடத்திற்க்கு வேலை செய்ய போகும் போது இந்த தொந்தரவுகள் கிடையாது. குடும்பத்துடன்
குடி பெயர்ச்சி செய்கிறார்கள். சொந்த வீடு என்று எதுவும் கிடையாது. பள்ளிக்கூடம் மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை. சில சாமன்களை கையில் எடுத்து சென்று புதிய இடத்தில் வேலை செய்யும்
இடத்திற்க்கு அருகிலேயே குடிசை கட்டி வாழ்கின்றனர்.
புதிய
இடம். அவர்களை சுற்றி புதிய மனிதர்கள். அந்த இடம் இயற்க்கை சூழ்ந்த நிலையாக இருக்கலாம்.
பணக்காரர்கள் வசிக்கும் இடமாக இருக்கலாம். தொழிற்பேட்டையாக இருக்கலாம்.
நாம்
பொருட்காட்சியில் சென்று வரிசையில் நின்று பார்த்து விட்டு வரும் வாகனங்களை இவர்கள்
ரோட்டில் ஓடும் போது பார்க்கலாம். அதை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. அதிக
பட்சம் அதில் ஒரு முறை சென்று வர ஆசைப்படலாம். இதனால் அவர்கள் கடன் வாங்கி வாகனம் வாங்க
வேண்டிய அவசியமில்லை. கடன் இல்லை தவணை கட்ட வேண்டிய டென்சன் இல்லை. BP இல்லை. மீண்டும்
வேலை மாற்றம் ஏற்ப்பட்டால் ஏற்க்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் படித்த நடுத்தர
மக்களுக்கு இந்த வசதி கிடையாது. எப்போது கவலைகள். எதிர்காலம் குறித்த கவலைகள்.
தொழிலாளிகளுக்கு உடல் உழைப்பு காரணமாக நோய்கள் இல்லை. இறுதி கால கட்டங்களில்
இவர்களுக்கும் எல்லோரையும் போல நோய்களும் பிரச்சனைகளும் வரலாம். ஆனால் அதற்கு முன்பு
கவலையில்லாத நிம்மதியான வாழ்க்கை. படுத்தவுடன் நல்ல தூக்கம் வரும்.
இந்த
தொழிலாளிகளுக்கு அந்த கவலை ஏதும் கிடையாது. இவர்கள் பெற்றோர்களை அனாதை ஆசிரமத்தில்
விடுவதில்லை. அவர்களுடனேயே வைத்துள்ளனர்.
ஆனால்
இவர்கள் நடுத்தர மக்களை போல நல்ல உடை நல்ல வீடு இல்லை என்று கவலைப்படுகிறார்கள்.
வாழ்க்கையை
முழுமையாக புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. புரிந்து கொண்டவர்கள் ஞானியாகி விடுகிறார்கள்
அல்லது பைத்தியமாகி விடுகிறார்கள். இருவர் பேசுவதும் யாருக்கும் புரிவதில்லை. ஞானியாக
மாறியவன் அதன் சுவையை அனுபவிக்க வேறு ஒரு உடையில் தன்னை புகுத்தி கொண்டு உபதேசம் செய்து
அதில் உள்ள சுகத்தில் முழ்கி விடுகிறான்.
பைத்தியகாரனுக்கு
அந்த கவலையில்லை. அவண் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று விரும்புவதில்லை. அவனை
யாரும் அணுகுவதில்லை. தன் விருப்பப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறான். சமூகம் அவனை ஒதுக்கி
ஊதாசினப்படுத்துகிறது.
இப்படிப்பட்ட
வாழ்க்கையில் இருக்கு சுதந்திரத்தின் காரனமாகவே பலரும் பல சமயங்களில் எல்லாவற்றையும்
உதறிவிட்டு சாமியாரக போக வேண்டும் என்ற நினைப்பு ஏற்ப்படுகிறது அல்லது சொந்த ஊருக்கு
போய் எளிமையான வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றனர். அது மிக சிலருக்கே வாய்க்கிறது.
ஏழைகள்
என்று நாம் சொல்லும் மக்கள் உண்மையில் அனைத்தும் உள்ள பணக்காரர்கள். அவர்கள் தாங்கள்
வாழும் அருமையான வாழ்க்கையை உணராமல் வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.